மார்கெட் வியாபாரிக்கு கொரோனா : பிற வியாபாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் பரிசோதனை - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/04/2020

மார்கெட் வியாபாரிக்கு கொரோனா : பிற வியாபாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் பரிசோதனை



வேலூர்: வேலூரில் உள்ள நேதாஜி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த மார்க்கெட்டைச் சேர்ந்த மற்ற வியாபாரிகள், பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அந்த வியாபாரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண்ணுக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டு, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது 60 வயது கணவரும், 29 வயது மகள், 4 வயது பேத்தி ஆகிய 3 பேரும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதியானது. இவர்களுக்கும் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ள அந்த நபர் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கடை நடத்தி வருகிறார். இதனால், கரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுக்க அந்த மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் மற்ற வியாபாரிகள், பணியாளர்கள் ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதற்காக பழை பேருந்து நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு நேதாஜி மார்கெட் வியாபாரிகள், பணியா ளர்கள் அனைவரிடம் இருந்தும் ரத்தம், உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்படும், இதன்மூலம் கரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப் பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை
அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நேதாஜி மார்க்கெட் வியாபாரி, அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459