தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்களை பெறுவதற்கு பொதுமக்களின் வீடு
தேடி சென்று டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அவரவர் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படும் என்றும், அதில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள், நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறையை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கவும், தனிநபர் இடைவெளியை பின்பற்றி பொருட்களை பெற்றுச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.