தமிழகத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 7,267 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள். நேற்று 738 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பாதிப்பு 834 ஆக உயர்ந்துள்ளது.
27 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேபோல இன்று மட்டும் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
.
.
புதிய சோதனைக் கருவி (Rapid Test) மூலம் 33 நிமிடங்களில் முடிவு தெரியும். ஒரே குழுவாக டெல்லி சென்று வந்தவர்கள் 1480 இதில் 863 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிக நுரையீரல் தொற்று உள்ளவர்களுக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன் மாதிரியும் சோதிக்கப்படுகிறது. கொரோனா பாதிக்கப்பட்டது தெரிய வந்தால் உடனடி தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்” என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.