குவியும் ஆர்டர்கள் : மேலும் 75 ஆயிரம் பேரை பணியமர்த்தும் அமேசான் - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/04/2020

குவியும் ஆர்டர்கள் : மேலும் 75 ஆயிரம் பேரை பணியமர்த்தும் அமேசான்



ஆன்லைன்  நிறுவனமானஅமேசான் மேலும் 75 ஆயிரம் பேரை  பணியமர்த்த உள்ளது.
ஊரடங்கு உத்தரவால் நாடே நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளாகவே முடங்கிப்போய் உட்கார்ந்துள்ளனர். போக்குவரத்துகள் மே 3 ஆம் தேதிவரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. உணவு விடுதிகளில் பார்சல் சாப்பாடு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழு முதல் எட்டு லட்சம் கோடி ரூபாய் அளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன.  ஆன் லைன் விற்பனைகள் மீண்டும் மெல்ல சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.

Amazon Jobs Vacancy for 80,000 new workers – India Taaza Khabar

இந்நிலையில், ஆன்லைன் விற்பனையில் ஆர்டர்கள் குவிவதால் மேலும் 75 ஆயிரம் பேரை அமேசான் நிறுவனம் பணியமர்த்த உள்ளது.
ஏற்கனவே 1 லட்சம் ஊழியர்களை பணிக்கு அமர்த்திய அமேசான் நிறுவனம் மீண்டும் ஆட்களைச் சேர்க்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

Amazon India to hire for more than 2,000 roles- Business News


இதனால் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களிடம் பொருட்களைக் கொண்டு சேர்க்க ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் அமெரிக்காவின் மற்ற துறைகளில் வேலை இழந்த தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் என அமேசான் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459