சென்னையில் 112 இடங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளாக சென்னை மாநகராட்சியால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகள் அனைத்திலும் பறக்கும் கேமரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த பகுதிகள் அனைத்திலும் பறக்கும் கேமரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பறக்கும் கேமராவில் உள்ள தொழில்நுட்பம் வழியாக வெளியில் சுற்றுபவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். அப்படி வெளியில் நடமாடுபவர்களை கண்டுபிடித்ததும் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று சுற்றித்திரிபவர்களை மடக்கி பிடிக்கிறார்கள்.
தேவையில்லாமல் சுற்றுபவர்களை பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்புகிறார்கள்
. மீண்டும் மீண்டும் போலீசில் சிக்குபவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
. மீண்டும் மீண்டும் போலீசில் சிக்குபவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாலைகளில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 269-ன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த சட்டப்பிரிவை தடை செய்யப்பட்ட பகுதியில் சுற்றுபவர்கள் மீதும் போடுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் நபர்களுக்கு 6 மாதம் வரையில் சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
நோய் பரவும் ஆபத்து இருப்பது தெரிந்தும் வெளியில் நடமாடிய குற்றத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நோய் பரவும் ஆபத்து இருப்பது தெரிந்தும் வெளியில் நடமாடிய குற்றத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அந்தந்த துறைகளை சேர்ந்தவர்களே வீடுகளுக்கு சென்று நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வர அவசியமில்லை.
இதையும் மீறி சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் மீறி சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியிடங்களில் இருந்தும் பலர் வருகிறார்கள். அவர்களையும் கண்காணித்து திருப்பி அனுப்பி வருகிறோம். எனவே யாரும் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு உறவினர்களை தேடியும் வர வேண்டாம்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.