தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையானது 571 ஆக இருந்தது. நேற்று 84 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 50 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இந்திய அளவில் தமிழகம் கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது. மேலும், டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்களுக்கு அதிகளவில்
கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சிகிச்சை மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் நிலையில், போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
இன்று 50 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ள நிலையில், இவர்களில் 48 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட நபர்கள் ஆவார்கள். மேலும், அரசின் கண்காணிப்பில் 205 பேர் இருக்கின்றனர்.
தனிமைப்படுத்துதல் தொடர்பான விபரங்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர அலைபேசி மற்றும் கரோனா தொடர்பான சந்தேகங்கள் குறித்த அழைப்புகள் தற்போது வரை 40 ஆயிரம் வரை பெறப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 1500 க்கும் அதிகமாக பெறப்படுகிறது என்று தெரிவித்தார்.