தென்கொரியாவில் 51 பேர், நோய்த் தாக்குதலில் இருந்து மீண்டனர். இந்நிலையில் மீண்டும் அவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. குறுகிய காலத்தில் சோதனை நடத்தப்பட்டது இதற்கான காரணமாக இருக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
தென்கொரியாவில் இன்று 50க்கும் குறைவான நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 10,284 என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் புதியதாக மூன்று பேர் கரோனா வைரஸால் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை186 ஆக அதிகரித்துள்ளது, 130க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை கரோனா நோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இதன் மூலம் குணப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையை 6,598 ஆக உயர்ந்துள்ளதாக தென்கொரிய நோய்த் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென் கொரியாவில் தொற்றுநோய்களின் மையப்பகுதியான டேகு மற்றும் அதைச் சுற்றியுள்ள வட கியோங்சாங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் நடத்திய பரிசோதனையில் கிடைத்துள்ள முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நோயிலிருந்து மீண்டு வந்தவர்களில் 51 பேருக்கு கரோனா இருக்கிறது என்ற முடிவை பரிசோதனை காட்டியுள்ளதுதான் இந்த அதிர்ச்சிக்கு காரணம்.

உலக அளவில் நோய்தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை லட்சக்கணக்கில் எனறால் குணமானோர் எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் என்ற அளவில் ஆறுதலும் கிடைத்து வருகிறது. கரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் பலத்த எதிர்ப்பு சக்தி காரணமாக அவர்கள் மீண்டு வரவும் வாய்ப்புகள் உள்ளன என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
மீண்டுவந்த 51 பேருக்கு நோய்த்தொற்று இருபபது குறித்து தென் கொரியாவின் நோய்க்கட்டுப்பாட்டு மைய இயக்குநர் ஜெனரல் ஜியோங் யூன்-கியோங் கூறுகையில், ”தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மீண்டு வந்துள்ளனர் என்றுதான் புரிந்துகொள்ளவேண்டும். ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் மீண்டும் சோதனை நடத்தினால் முடிவுகள் தவறாக வர வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் குணமடைவதற்குப் பதிலாக, அவர்களிடம் வைரஸ் மீண்டும் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது” என்றார்.
இதற்கிடையில், சூன்சுன்ஹியாங் பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் கிம் டே-கியுங் கூறுகையில், ” குணமான பிறகு பரிசோதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மீண்டும் வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தால் அவர்களிடம் மீண்டும் வைரஸ் செயல்படத் தொடங்கியுள்ளது அல்லது அவருக்கு நோய் முற்றியுள்ளது என்றுதான் அர்த்தம் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு கோவிட்-19 நோயாளி 24 மணிநேர இடைவெளியில் செய்யப்படும் இரண்டு சோதனைகளுக்கு எதிர்மறையான முடிவுகளைக் காட்டினால்தான் அவருக்கு நோய் முழுமையாக குணமடைந்ததாகக் கருதப்படும் என்றே உலக சுகாதார மையத்தின் வழிகாட்டு நெறிமுறையிலும் கூறப்பட்டுள்ளது.