வயநாடு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் வெளியில் வரும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த விதிமுறையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஊரடகு விதிமுறைகளை மீறுவோர் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பொது இடங்களுக்கு வரும் மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
என மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு இளங்கோ கூறி உள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘மாஸ்க் அணியத் தவறும் நபர்கள் மீது கேரள காவல் சட்டம் 118இ-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். 5000 ரூபாய் அபராதம் விசூலிக்கப்படும். குற்றம்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர விரும்பினால், சட்டத்தின் படி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்’ என்றார்.என மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு இளங்கோ கூறி உள்ளார்.