ரஷ்யாவில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள போது வீட்டு வாசலில் சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக் கொலை - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/04/2020

ரஷ்யாவில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள போது வீட்டு வாசலில் சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக் கொலை


மாஸ்கோ: ரஷ்யாவில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள போது தன் வீட்டு வாசலில் சத்தமாக பேசிய 5 பேரை ரஷ்யர் ஒருவர் சுட்டுக் கொலை செய்து உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்யாவிலும் ஊரடங்கு சிலபகுதிகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கில் 200 கி.மீ தொலைவில்
உள்ள ரியாசான் பிராந்தியத்தில் உள்ள யெலட்மா கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
யெலட்மா கிராமத்தில் சனிக்கிழமை இரவு நேரத்தில் 31வயது நபர் ஒருவரின் வீட்டு ஜன்னலுக்கு வெளியே இளம் வயது ஆண்களும் பெண்களும் கூட்டமாக நின்று சந்தமாக பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த 31வயது நபர், அவர்களிடம் சென்று அங்கிருந்து போகும்படி கூறியுள்ளார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அந்த நபர், தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 4 ஆண்கள் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக யாசான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459