தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
.
அடுத்த 3 நாட்களுக்கு கடலோர மாவடடங்களில் சில இடங்களில் 30 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும் என்றும், திருச்சி வேலூர் கரூர் திருத்தணி உள்ளிட்ட இடங்களில் 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்பதால், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது