வாங்க 360 டிகிரி கேமராவில் ஊர் சுற்றலாம்....! - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/04/2020

வாங்க 360 டிகிரி கேமராவில் ஊர் சுற்றலாம்....!






ஹாய் ஃபிரெண்ட்ஸ்…
யாரும் வெளியில போயிடலயே! எல்லோரும் வீட்லதானே இருக்கீங்க? என்னை மாதிரியே நீங்களும் `கொரோனா மட்டும் முடியட்டும்’னு பைக்கை முறுக்கக் காத்திருக்கீங்களா? உங்களுக்காக வீட்டுக்குள்ள உக்கார்ந்துக்கிட்டே சில இடங்களை இப்போ சுத்திக்காட்டப்போறோம். ஓகே! சென்னையில் இருப்பவர்கள் பெரும்பாலும் மெரினா, பெசன்ட் நகர், மாமல்லபுரம் என்று பீச் பக்கம் மட்டும்தான் டூர் அடித்திருப்பீர்கள்? ஆனால், சென்னையில் 360 டிகிரியில் பார்க்க வேண்டிய இடங்கள் பல இருப்பது உங்களுக்குத் தெரியுமா மக்களே? அப்படிப்பட்ட சில இடங்களைத்தான் நாம் இப்போது 360 டிகிரி கேமராவிலேயே ஷூட் பண்ணியிருக்கிறோம். பார்த்துட்டு என்ஜாய் பண்ணுங்க!
சென்னையின் மூலையில் அண்டர்வாட்டர் டனல் இருப்பது திருவான்மியூர் மேன்ஷன் பார்ட்டிகளுக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும். அப்படியே கடலுக்குள் போய் விதவிதமான மீன்களைத் தலைக்கு மேலே, காலுக்குக் கீழே 360 டிகிரியில் பார்ப்பதெல்லாம் செம எக்ஸ்பீரியன்ஸ். சென்னையில் ரயில் மியூஸியம் என்று ஒன்று இருப்பது பல சென்னைவாசிகளுக்கே தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை. சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு இருந்த ரயில் பெட்டி தயாரிப்பெல்லாம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பது, டைம் மெஷினில் ஏறி நம்மை அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்வதுபோல் இருக்கிறது. அதேபோல்தான் சென்னை எழும்பூரில் இருக்கிற மியூஸியமும்.

அண்டர்வாட்டர் டனல்

ரயில் மியூஸியம்

தக்ஷிண சித்ரா மியூஸியம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். பல்வேறு கலாசார வீடுகளையும் கலைப்பொருள்களையும் 360 டிகிரியில் பார்ப்பது செமயான அனுபவம். அதேபோல், நம் ஊர் மெட்ரோ ரயிலில் போகும்போது, திடீசென்று கும்மிருட்டில் போவதுபோன்ற அனுபவத்தைச் சந்தித்திருக்கிறீர்களா? அட, ஆமாங்க… அண்டர்கிரவுண்டில் ரயில் போவதைத்தான் சொல்கிறோம். மெட்ரோவின் அந்த அண்டர்கிரவுண்ட் ஆபரேஷனின் ஃபீல்டு ஒர்க்கையும் 360 டிகிரியில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறோம்.

தக்ஷிண சித்ரா மியூஸியம்

ஆந்திராவில் இருக்கிற கந்திக்கோட்டா, பெல்லம் குகைகள் நிச்சயம் நீங்க கேள்விப்பட்டிருப்பீர்கள்… ஒரு நாள் செலவழித்தால், இந்த இடங்களுக்கு அற்புதமான டூர் அடிக்கலாம்
. இந்த 360 டிகிரி வீடியோவைப் பார்த்தீர்கள் என்றால், டூர் அடித்த எஃபெக்ட்டே கிடைக்கலாம்.

கந்திக்கோட்டா

பெல்லம் குகைகள்





எல்லாம் ஓகே… `கோயம்பேடு மார்க்கெட், கபாலீஸ்வரர் கோயில், கன்னிமாரா நூலகம் எல்லாம் இந்த டூரிஸ்ட் ஸ்பாட்கள்ல அடங்குமா என்ன
… போங்கா இருக்கே… அடப் போங்கப்பா’ என்று கமென்ட் போட எத்தனிப்பவர்கள், இந்த 360 டிகிரி வீடியோவைப் பார்த்துவிட்டு கமென்ட் பண்ணவும். கொரோனா முடிஞ்சப்புறம் ‘சண்முகம் எட்றா வண்டியை கோயம்பேட்டுக்கு’னு கிளம்பத்தான் போறீங்க!

கோயம்பேடு மார்க்கெட்

கபாலீஸ்வரர் கோயில்

கன்னிமாரா நூலகம்

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459