கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் தவிர, வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என உத்தரவிடப்பட்டு, இந்த உத்தரவு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.
மாநில முதலமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார்
. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல். 30-ந்தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஊரடங்கு நீட்டிப்பால் ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும். கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மீண்டும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.