வங்கிகள் இனி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/04/2020

வங்கிகள் இனி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும்


வாடிக்கையாளர்களின் வருகை குறைந்திருப்பதன் காரணமாக மே 3ஆம் தேதி வரை வங்கிகள் இனி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என, தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதற்கட்ட ஊரடங்கின்போது வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வங்கிகளுக்கு
வந்ததன் காரணமாக மாலை 4 மணி வரை வங்கிகள் செயல்பட்டு வந்தன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கு உத்தரவு தற்போது கடுமையாக பின்பற்றப்படுவதால் வாடிக்கையாளர்கள் நடமாட்டம் குறைந்துள்ளதோடு, 1 மணிக்கு முன்னதாகவே பெரும்பாலானோர் தங்களது வங்கிப் பணிகளை முடித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459