சீனாவில் கொரோனாவின் 2 ஆம் அலை தொடக்கம்:அதிர்ச்சியில் மக்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/04/2020

சீனாவில் கொரோனாவின் 2 ஆம் அலை தொடக்கம்:அதிர்ச்சியில் மக்கள்


பெய்ஜிங்
சீனாவின் ஊஹானில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது 180 நாடுகளுக்கு மேல் தடம்படித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. உகான் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கப்பட்டது. தற்போது வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கொரோனா மீண்டும் பரவி வருகிறது.

சீனாவில் நேற்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய நாள் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 5-ம் தேதி 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின் ஆறு வாரங்கள் கழித்து நேற்று கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 82,160 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3341 பேர் உயிரிழந்துள்ளனர்
. சீனாவின் எல்லைகளில் அதிக கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் எல்லை அருகே உள்ள ரஷ்யாவில் இருந்து கொரோனா அதிகம் பரவுவதால் எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க சீன அரசு முடிவெடுத்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459