1 ரூபாய்க்கு சாஷே சானிட்டைசர் - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/04/2020

1 ரூபாய்க்கு சாஷே சானிட்டைசர்




சானிடைசர் சாஷே
சி.கே.ரங்கநாதனின் தந்தை சின்னிகிருஷ்ணன், சாஷே பாக்கெட்டுகளில் அடைத்த ஷாம்பு விற்பனையைத் தொடங்கி, அடித்தட்டு மக்களும் ஷாம்புவைப் பயன்படுத்தும்விதமாக, இந்திய விற்பனைத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சானிடைசர் மூலம் கைகளை அடிக்கடி சுத்தம்செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். தற்போது கொரோனா அதிவேகமாகப் பரவிவரும் சூழலில் மிகமிக அத்தியாவசியமான ஒன்றாக சானிடைசர் உருவெடுத்துள்ளது. தேவை அதிகமுள்ள நிலையில் உற்பத்தி போதுமானதாக இல்லாததால் விலை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. எனவே, அடித்தட்டு மக்களால் சானிடைசர்களை வாங்கிப் பயன்படுத்த முடியவில்லை.

சி.கே.ரங்கநாதன்

சி.கே.ரங்கநாதன்

இதற்குத் தீர்வாக கெவின்கேர் நிறுவனம் தனது `சிக்’ பிராண்ட் மூலமாக 1 ரூபாய் சாஷேயில் சானிடைசரை அறிமுகப்படுத்தியுள்ளது. “நாங்கள் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்துவதாகக் கருதவில்லை. அடித்தட்டு ஏழை மக்களும் வாங்கிப் பயன்படுத்தும்விதமாக எங்களால் இயன்ற சேவையாக இதைக் கருதுகிறோம்” என்கிறார் கெவின்கேர் நிர்வாக இயக்குநர் சி.கே.ரங்கநாதன். ’சிக்’ பிராண்டில் மட்டுமல்லாது, ’நைல்’ மற்றும் ’ராகா’ ஆகிய பிராண்டுகளிலும், வெவ்வேறு அளவுகளில் சானிடைசர்களைக் கொண்டுவந்துள்ளது இந்நிறுவனம்
.

தற்போதுள்ள இக்கட்டான சூழலில் சானிடைசரை சாஷேயில் உடனடியாகக் கொண்டுவருவது குறித்து சி.கே.ரங்கநாதன் கூறுகையில், “இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் பயன்படும்விதமாகச் செயல்படும் சமூகப் பொறுப்புணர்வோடுதான் இதை அறிமுகப்படுத்தியுள்ளோம்
. எங்களிடம் மிகவும் திறமையான ரிசர்ச் & டெவெலப்மென்ட் குழு இருக்கிறது. ஏற்கெனவே நிறைய பொருள்களைத் தயாரித்துள்ளோம். கிட்டத்தட்ட 300 வகையான தயாரிப்புகள் பயன்பாட்டுக்குத் தயார் நிலையில் எங்களிடம் இருக்கின்றன. எனினும் அவை அனைத்தையும் நாங்கள் அறிமுகப்படுத்தவில்லை.
இந்தத் தயாரிப்பின் உடனடித் தேவையைப் புரிந்துகொண்டு திட்டமிட்டபடி 15 நாள்களில் முடித்திருக்கிறோம்.
சி.கே.ரங்கநாதன்
கொரோனா பரவல் காரணமாக ஹேண்ட் சானிடைசரின் தேவை அதிகமாக இருப்பது தெரிந்தது. எனவே,
மிகக்குறுகிய காலமாக, 15 நாள்களுக்குள் விரைந்து தயாரிக்கத் திட்டமிட்டோம். பொதுவாக புதிய தயாரிப்பைக் கொண்டுவர 6 முதல் 18 மாதங்கள்வரை தேவைப்படும். ஆனால், சானிடைசர்கள் தயாரிப்பில் ஏற்கெனவே எங்களுடைய செயல்பாட்டைத் தொடங்கியிருந்ததால் மிகவும் விரைவாக அதைத் தயாரிக்க முடிந்தது.

மார்ச் 5-ம் தேதி சாஷேக்களில் சானிடைசர்கள் கொண்டுவர முடிவு செய்தோம். அடுத்த 15 நாள்களில், அதாவது மார்ச் 20-ம் தேதி முதல் விற்பனையைத் தொடங்கிவிட்டோம். இந்தத் தயாரிப்பின் உடனடித் தேவையைப் புரிந்துகொண்டதால், திட்டமிட்டபடி 15 நாள்களில் செய்து முடித்திருக்கிறோம். இதுவே, எங்களுடைய குழு, காலத்துக்கேற்ப சிந்தித்து முடிவெடுத்து, சுறுசுறுப்பாகச் செயலாற்றுவதற்கு எடுத்துக்காட்டாகும். இதன்மூலம் எங்கள் நிறுவனம் சரியான பாதையில் செல்கிறது என்பதையும் புரிந்துகொண்டோம்” என்றார்.

சானிடைசர்

சானிடைசர்

சி.கே.ரங்கநாதனின் தந்தை சின்னிகிருஷ்ணன், சாஷே பாக்கெட்டுகளில் அடைத்த ஷாம்பு விற்பனையைத் தொடங்கி, அடித்தட்டு மக்களும் ஷாம்புவைப் பயன்படுத்தும்விதமாக, இந்திய விற்பனைத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியவர். அப்படி முதன்முதலில் கொண்டுவரப்பட்டதுதான் வெல்வெட் ஷாம்பு சாஷே. அதேபோன்று தற்போது சானிடைசர்களிலும் சாஷே முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459