மனித குல வரலாறு புத்தகமும் கல்வியாளர் ஷெரீப் -ன் பார்வையும் - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/04/2020

மனித குல வரலாறு புத்தகமும் கல்வியாளர் ஷெரீப் -ன் பார்வையும்



தொடர் வாசிப்பில் இன்று 16.4.2020 படித்த 21 வது புத்தகம் பெரிய ஆளுமை, பல இலக்கியவாதிகளை உருவாக்கியவர்,ஆசிரியர், பேராசிரியர்களுக்கெல்லாம் தத்துவ வகுப்பு எடுப்பவர், மார்க்ஸிய அறிஞர் தோழர் SAP என அழைக்கப்படும் தோழர்.S.A .பெருமாள் எழுதிய மனித குல வரலாறு.19 நூல்களிலிருந்து ஆதாரங்கள் எடுத்துள்ளார்.
இப்புத்தகம் 13 தலைப்புகளில் 136 பக்கங்களை உடையது.
புரதரான மதங்கள் தோன்றிய காலம் முதல் இன்று வரை மக்கள் அறியாமையிலும், மூட நம்பிக்கைகளிலும் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.. விஞ்ஞானம் பெருமளவிற்கு வளர்ந்துள்ள போதிலும் இந்த அஞ்ஞானம் போக மறுக்கிறது. மனிதன் கடவுளின் படைப்பல்ல. இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் உருவான வன் என்பதை விஞ்ஞான ரீதியில் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. சூரியனைப் போன்ற லட்சக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டது பால்வெளி மண்டலம்(Milky Way)என்பதாகும். இத்தகைய லட்சக்கணக்கான பால்வெளி மண்டலங்களைக் கொண்டது தான் பிரபஞ்சம்(universal) எனப்படுவது. இது எல்லையற்றது.வரம்பே இல்லாதது. சூரியனிடமிருந்தே பிரபஞ்சம் தோன்றியது. அண்டங்களும், ரட்சத்திரங்களும் கோடிக்கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில் தோன்றின. சூரியனில் பெரும் பிரளய  வெடிப்பு ஏற்பட்டது.
பெரும் வாயுப் பேரலை கிளம்பியது. சூரியனிலிருந்து  பல துண்டுகளாக பிய்த்துக் கொண்டு விண்வெளியல் ஓடி கிரகங்களாக மாறின. அவை தாய்க் கிரகமான சூரியனின் ஈர்ப்பு சக்தியில் அதைச் சுற்றி வருகின்றன. சூரியன் ஓரு மாதுளம் பழ அளவு என எடுத்துக் கொண்டால் புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய் ஆகியவை ஓரு குண்டூசியின் தலை அளவே இருக்கும். பூமி தோன்றியது குறித்து சொல்லக் கூடியது பிரளய வெடிப்பு கோட்பாடு ( Big bang theory) என்னும் கோட்பாடு ஆகும். சூரியனிலிருந்து ஒரு பெரும் கோளம் வெடித்து தனியே விழுந்தது. சுமார் 20 கோடி ஆண்டுகள் இடைவிடாமல் மழை பெய்து பூமியை குளிர வைத்தது. இதனால் பூமியின் மேற்பரப்பு குளிர்ந்து பாறையாக மாறியது.
பாறைகள் நொறுங்கி மண்ணாக, மணலாக மாறின. பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வருகிறது. அதனால் தான் சூரியனும் , நட்சத்திரங்களும் மற்ற கிரகங்களும் கிழக்கே உதித்து மேற்கே அஸ்தமனம் ஆவது போல் நமக்கு தோன்றுகிறது. கோடிக்கணக்கான ஆண்டுகள் மழை பெய்ததினால் கடல் உருவானது. கடலின் உள்ளே பெரிய மலைகளும், பள்ளங்களும், சமதளங்களும் உண்டு.
கடல் தான் உயிரின் தாய். ஆரம்ப உயிர்கள் தோன்றியதும், உயிரினங்கள் உதயமானதும் கடலில் தான். இயோ சோயிக் காலத்தில் தான் ஆரம்ப கால உயிரினம் தோன்றின. பால சோயிக் காலத்தில் பிராணிகள் தோன்றின. சிலூரியன் காலத்தில் செடிகளும், முதுகெலும்புள்ள பிராணிகளும் தோன்றின.டிவானியன் காலத்தில் பல வகை உயிரினங்கள் , மீன்கள் தோன்றின.கார்னி வோரஸ் காலத்தில் பிரமாண்ட மரங்கள், செடி, கொடிகள், நிலத்தில் வாழும் உயிரினங்கள் தோன்றின.பெர்மியன் காலத்தில் பூத்துக் காய்க்கும் மரங்கள், செடிகள், பிராணிகள் பெருகின. நான்காம் கர்ப்ப காலத்தில் குரங்கு மனிதன் தோன்றினான். அவனை "நியாண்டர்தால் " மனிதன் என்று விஞ்ஞானிகள் அழைத்தனர். மனிதன் தனி சிருஷ்டி அல்ல
. ப்ரைமோடா என்ற பாலூட்டி இனத்தை சார்ந்த முதுகெலும்பு உள்ள பிராணி.ப்ரை மோடா இனத்தில் ஐந்து முக்கிய குடும்பங்கள் உள்ளன.லெமுர், டார் சியஸ்,பபூன் போன்ற மூன்று வகை குடும்பங்களும், நான்காவது குடும்பத்தில் கிப்பன், உராங் உட்டான், சிம்பன்சி, கொரில்லா இருந்தன. மனித இனம் ஐந்தாம் குடும்பத்தைச் சேர்ந்தது. பூமியில் சுமார் 400 வகையான குரங்குகள் உள்ளன. ஐந்து வகை வாலில்லா குரங்குகள் தவிர்த்து  மற்ற குரங்குகள் அனைத்தும் மரத்தில் வாழும் பிராணிகள்.நவீன விஞ்ஞானம் உயிர்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய விதிகளை கண்டுபிடித்து விட்டது.
கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்ற கருத்து முதல்வாதத்தையும் ,மாற்றம் என்பதே கிடையாது , அனைத்தும் அப்படியே உள்ளன என்ற மாறா நிலை வாதத்தையும், பிற்போக்கு வாதங்களையும் தகர்த்தெறிந்து விட்டது. உயிர் என்பது பொருளின் சிறந்த வடிவமே என்று செயல்முறை  மூலம் விஞ்ஞானம் நிரூபித்துள்ளது.கருவிகளை கண்டு பிடித்த பின்புதான் மனிதன் மிருக நிலையிலிருந்து வேறுபட்டான். ஆண்கள் வேட்டை சமூகத்தில் இருந்த போது பெண்கள் மேய்ச்சல் சமூகத்தையும், விவசாயத்தையும் உருவாக்கினர்
. இயற்கையின் இயக்கவியல் போன்ற சிறந்த நூல்களை எழுதிய பிரடெரிக் ஏங்கல்ஸ் இயற்கை விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் கிடைத்த அறிவை பொதுமைப் படுத்தி விஞ்ஞான ரீதியில் உயிர்த் தோற்றம் பற்றி விளக்கம் அளித்தார். இயற்கை நிலைமைகளோடு எவ்வித தொடர்புமின்றி தானாகவே உயிர் தோன்ற முடியும் என்ற விஞ்ஞானத்திற்கு புறம்பான கருத்தை நிராகரித்தார். உயிரற்ற பொருள்களிலிருந்து உயிர்களுள்ள பொருள்கள் தோன்றுவதற்கு எண்ணற்ற உதாரணங்கள் தர முடியும்.
எனவே உலகம் தோன்றிய வரலாறு குறித்தும் , உயிரினங்களின் தோற்றம் குறித்தும், மனித குல வரலாறு மிக  அற்புதமாக எழுதப்பட்டுள்ளது.. இதனை எல்லோரும் வாங்கி படித்து உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
க.ஷெரீப்,
சிவகாசி.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459