இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,815 ஆக உயர்வு - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/04/2020

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,815 ஆக உயர்வு



இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,815 ஆகவும் பலி எண்ணிக்கை 353 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
மேலும், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 1,190 ஆக உயர்ந்துள்ளது. 
மாநிலங்களைப் பொருத்தவரையில் கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 2,337 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. 
தொடர்ந்து தில்லியில் 1,510 பேரும், தமிழகத்தில் 1,204 பேரும், ராஜஸ்தானில் 879 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
மாநில வாரியாக நிலவரம்:
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459