உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் பரவலை உலகளாவிய தொற்றாக அறிவித்தது. அதன் பொருட்டு, தமிழக அரசு இந்த வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளது.
சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய விமான நிலையங்களில் 209284 சர்வதேச பயணிகள் தெர்மல் ஸ்க்ரீனிங் முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் இதுநாள் வரையில் (மார்ச்- 27), 43,537 மக்கள் 28 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மிகவும் பாதிப்படைந்த நாடுகளில் இருந்து பயணித்த 112 அறிகுறியற்ற நோயாளிகள் விமான நிலையத்திற்கு அருகே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மிகவும் பாதிப்படைந்த நாடுகளில் இருந்து பயணித்த 112 அறிகுறியற்ற நோயாளிகள் விமான நிலையத்திற்கு அருகே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
277 பேர் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 27ம் தேதி வரை 1500 மாதிரிகள் ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளன. அதில்,1393 பேருக்கு நெகடிவாகவும், 42 பேருக்கு கொரோனா வைரஸ் டெஸ்ட் பாசிடிவாகவும் வந்துள்ளது. 65 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படமால் உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று மாவட்டம் வாரியான அறிவிப்பு: தமிழகத்தில் சென்னை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்றின் ஹாட்ஸ்பாட்டாக உள்ளது. சென்னையில்
அதிகபட்சமாக 17 வழக்குக்கு பதிவாகியுள்ளன. சேலம், ஈரோடு மாவட்டங்களில் தலா ஆறு வழக்குகள் பதிவாகியுள்ளன. நாளடைவில், மதுரையில் அதிகமான தொற்று உறுதி செய்யப்படலாம் என்றும் கணிக்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 4523 மக்கள், 28 நாள் தனிமைப்படுத்தல் செயல்முறையில் உள்ளனர்.

இதற்கிடையில், நேற்று கன்னியாகுமரி அரசு கல்லூரியில் மருத்துவமனையில் எற்பட்ட மூன்று உயிரழப்புக்கு காரணம் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்தார்.
தயாராகும் தனியார் மருத்துவமனைகள்: முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருக்கும் அனைத்து தனியார்
மருத்துவமனைகளும் 25 % படுக்கைகளை கட்டாயம் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும் இந்த படுக்கைகள் உள்ள அறைகள் அனைத்து நவீன வசதிகள் அடங்கியதாக இருக்க வேண்டும், மற்ற வார்டுகளில் இருந்து முற்றிலுமாக தனிமைப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் தவறக்கூடிய மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.