உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் இதை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். என்ன தான் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வாருங்கள் என அரசு
அறிவுறுத்தி இருந்தாலும், பைக் மற்றும் காரில் ஊர் சுற்றுபவர்களை சரளமாக காண முடிகிறது.

மக்களை மீண்டும் வீட்டிற்குள் அமர்ந்த போலீஸ் என்ன தான் விதவிதமான ட்ரீட்மெண்டுகளை கையில் எடுத்தாலும் எதுவும் பலனளிப்பதாக தெரியவில்லை. மளிகை கடைக்கு போகிறேன்… காய்கறி வாங்க போறேன்… என்று வெளியே வந்துவிடுகின்றனர்.

இதை தடுக்க மதுரை மாநகராட்சி ஒரு சூப்பர் நடவடிக்கையை அறிவித்துள்ளது.
மளிகை பொருட்கள் தேவை என மதுரைவாசிகள் போன் செய்தாலே போதும், வீட்டிற்கே நேரில் சென்று டோர் டெலிவரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி அண்ணா நகர், கே.கே.நகர், கூடல் நகர், விளாங்குடி, தத்தனேரி, ஆரப்பாளையம், அரசரடி, காளவாசல், தெப்பக்குளம் உள்ளிட்ட 17 பகுதிகளில் செயல்படும் மளிகை கடைகளை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது