*உலகையே புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவிரைவில் முடிவுக்கு வந்துவிடும் என நோபல் பரிசு வென்ற அறிவியல் ஆய்வாளர் மைக்கேல் லெவிட் கூறியுள்ளார்.*
*ஸ்டான்போர்டு பல்கலைக்கழக இயற்பியலாளரும், நோபல் பரிசு வென்றவருமான அறிவியல் ஆய்வாளார் மைக்கேல் லெவிட், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்க்கு பேட்டியளித்துள்ளார்.*
*அதில், உலகெங்கும் ஆட்டிப்படைத்து
வரும் கொரோனா வைரஸின் தாக்கம் கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்றும், சமூகத்தில் இருந்து மக்கள் விலகி இருத்தல் வேண்டும் என்று கூறியுள்ளார்.*
*ஏனெனில் சமூக விலகலே கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தாக இருக்க முடியும் என்றார்.*
*தொடர்ந்து பேசிய அவர், சீனாவை போன்று அமெரிக்காவும் விரைவில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டும் வரும். ஆனால் அதிக உயிரிழப்புகள் ஏற்படாது என மைக்கேல் லெவிட் தெரிவித்துள்ளார்.*
*கொரோனா வைரஸ் தொடர்பாக ஜனவரி மாதம் முதல் ஆய்வு மேற்கொண்டு
வரும் இவர், சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா கொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு சிக்கும் என தெரிவித்திருந்தார்.*
*அதுபோலவே அமெரிக்காவில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.*
*மேலும், சீனாவிலும் கொரோனாவால் 80 ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்படுவார்கள் என்றும், 3 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழக்க நேரிடும் என்றும் கூறியிருந்தது. அதுவும் நடந்தது.*
*இந்நிலையில், தற்போது கொரோனாவின் தாக்கம் முடிவுக்கு வரும் என அவர் கூறியிருப்பது சற்று ஆறுதல் அளித்துள்ளது.*