இனி ஒரே குஷிதான்... பிஎஸ்என்எல் நிறுவனம் எஸ்பிஐ வங்கியுடன் இணைகிறது - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/03/2020

இனி ஒரே குஷிதான்... பிஎஸ்என்எல் நிறுவனம் எஸ்பிஐ வங்கியுடன் இணைகிறது



பிஎஸ்என்எல் நிறுவனம் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து பாரத் இன்ஸ்டா பே என்ற யுபிஐ அடிப்படையிலான டிஜிட்டல் பேமண்ட் தளத்தை அறிமுகம் செய்துள்ளது.





Bharat InstaPay

Bharat InstaPay

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் யுபிஐ அடிப்படையிலான கட்டண தளமான Bharat InstaPayவை அறிமுகப்படுத்தியுள்ளது.



பிஎஸ்என்எல் அதிகாரிகள் கருத்து

பிஎஸ்என்எல் அதிகாரிகள் கருத்து

இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறுகையில், இந்த நிறுவனம் உருவாக்கிய புதிய கட்டண வசதி அதன் கூட்டாளர்களுக்கு, குறிப்பாக ப்ரீபெய்ட் விற்பனையாளர்களுக்கு அதன் விற்பனை சேவையை உடனடியாக வாங்க உதவும்.



எஸ்பிஐ மூலம் இயக்கப்படும்

எஸ்பிஐ மூலம் இயக்கப்படும்

இந்த டிஜிட்டல் கட்டண தளமானது எஸ்பிஐ மூலம் இயக்கப்படும் பிஎஸ்என்எல்லின் ஒரு புதிய முயற்சியாகும். இது பிஎஸ்என்எல்லின் அனைத்து வகையான சேனல் கூட்டாளர்களுக்கும் நிறுவனத்தின் அனைத்து கட்டண பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் முறையில் 24/7 என்ற அடிப்படையில் மேற்கொள்ள உதவுகிறது என பிஎஸ்என்எல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.



தொலைத் தொடர்பு சேவைகளை வாங்குவதற்கு காத்திருக்க வேண்டாம்

தொலைத் தொடர்பு சேவைகளை வாங்குவதற்கு காத்திருக்க வேண்டாம்

இந்த சேவை அறிமுகத்திற்கு முன்பு பிஎஸ்என்எல் கூட்டு விற்பனையாளர்கள் நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை வாங்குவதற்கு கட்டணம் செலுத்துவதற்கும் காத்திருக்க வேண்டிய சூழநிலை நிலவியது. குறிப்பாக விடுமுறை நாட்கள் எனப்படும் வார இறுதி நாட்களில் இது கூடுதல் தாமதமானது குறிப்பிடத்தக்கது.



24/7 என்ற நேர அடிப்படையில் Bharat InstaPay

24/7 என்ற நேர அடிப்படையில் Bharat InstaPay

இந்த Bharat InstaPay அறிமுகத்தின் மூலம் 24/7 என்ற நேர அடிப்படையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய பாரத் இன்ஸ்டாபே அதன் கூட்டாளர்களுக்கு உதவும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இனி விடுமுறை நாட்களிலும் திட்டங்களை வாங்கலாம்.



பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள அறிக்கை

பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள அறிக்கை

இதுகுறித்து பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது கூட்டாளர்களுக்கான பிஎஸ்என்எல்லின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கூட்டாளர்களின் வணிகத்தை விரைவான வேகத்தில் வளர்க்கவும் உதவும் என தெரிவித்துள்ளது.



பிஎஸ்என்எல் சேனல் பார்ட்னர்களுக்கு டிஜிட்டல் ஐடி

பிஎஸ்என்எல் சேனல் பார்ட்னர்களுக்கு டிஜிட்டல் ஐடி

பிஎஸ்என்எல்-ன் ஐடி தளமானது எஸ்பிஐ வங்கி தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் டிஜிட்டல் பேமண்ட்களை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு பிஎஸ்என்எல் சேனல் பார்ட்னர்களுக்கும் டிஜிட்டல் ஐடி வழங்கப்படும்.



எந்த ஊழியர்களின் தலையீடும் இல்லாமல் இயங்கலாம்

எந்த ஊழியர்களின் தலையீடும் இல்லாமல் இயங்கலாம்

இது பிஎஸ்என்எல் கூட்டாளர்களுக்கு பெரிதளவு பயணளிக்கும். Bharat InstaPay போர்டல், அப்படியானால், அனைத்து பரிவர்த்தனைகளும் 24/7 அடிப்படையில் எந்த ஊழியர்களின் தலையீடும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் திட்டமாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459