அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படுமா? - விளக்கம். - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/03/2020

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படுமா? - விளக்கம்.


ஒருநாள் ஊதியப்பிடித்தம் என்பது சில இயக்கங்கள் எடுத்த முடிவு.* 


*அதற்கு அந்தந்த இயக்கங்களின் உறுப்பினர்கள் விரும்பினால் கட்டுப்படலாம்.* 

 *சிலர் தன் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு செலுத்தாமல் இருக்கலாம் இது அவரவர்களின் விருப்பம் 

 *சில ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்திற்கு மேலாக நேரிடையாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் செலுத்தி வருகின்றனர். இதுவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும் 

*நம் விருப்பத்தைக் கேட்காமல் நம்மிடம் ஊதியப்பிடித்தம் செய்ய முடியாது.* 

இந்தமாத ஊதிய பட்டியல் கருவூலம் சென்றுவிட்டதால், அடுத்த மாத ஊதியத்தில் தான் பிடித்தம் செய்ய முடியும். 

 *இம்மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் முழு ஊதியம் தங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் அடுத்த மாதத்திற்கான ஊதியத்தில் தங்கள் விருப்ப கடிதம் அளித்தால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்

 *இவர் என்ன நினைப்பாரோ? அவர் என்ன நினைப்பாரோ? என்று கலக்கம் அடையாமல் உங்கள் மனதிற்கு சரியெனப் படுவதைச் செய்யுங்கள்.*
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459