தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/03/2020

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்


தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நியூசிலாந்தில் இருந்து சென்னை திரும்பிய 65 முதியவருக்கு கரோனா
உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 55 வயது பெண்ணுக்கும் கரோனா உறுதியாகி உள்ளது. அவர் கீழ்ப்பாக்க அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய 25 வயது இளைஞர் கரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் ” எனப் பதிவிட்டுள்ளார்.
ஊரடங்கை மதிப்போம்..
இந்தியாவில் கரோனா தொற்று பரவல் கடந்த வாரத்தைவிட வேகமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில்,
இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்துவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கரோனா சமூகப் பரவல் நிலைக்குச் செல்வதைத் தடுக்க சமூக விலகலைத் தவிர வேறு வழியே இல்லை என்பதால் பிரதமர் அறிவுறுத்தலின்படி ஊரடங்கு உத்தரவை மதிப்போம். உயிர் காப்போம்.
அன்பு வாசகர்களே….

வரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம்
. செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

– வாசகர்கள் நலனில் அக்கறையுடன் ஆசிரியர்மலர்
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459