Health

சருமத்தின் பளபளப்பை பாதுகாக்க சில டிப்ஸ்அகத்தின் அழகை புறத்தே வெளிப்படுத்தும் கண்ணாடியே நம் சருமம். நம் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் மற்றும் நோயின் தன்மையினை தோலைக் கொண்டே அறியலாம். ஓருவரின் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தோலின் தன்மை மாறுபடுவது மட்டுமல்லாமல் சில ஒவ்வாத செயல்கள் தோலில் பல நோய்களையும் ஏற்படுத்திவிடுகின்றன  நவீன வாழ்க்கை முறை மாற்றங்களால் நம் தோலில் ஏற்படும் பாதிப்புகள் கணக்கற்றவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது உணவு முறை மாற்றங்கள், துரித உணவு வகைகள், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடும் போது,


உடலில் தேவையற்ற ரசாயன்ங்கள்  மற்றும் கொழுப்பு அதிகமாகச் சேர்கிறது. இதனால் சிறுவயதிலேயே குழந்தைகள் அதிக உடல் பருமனுடன் காணப்படுவதுடன் கழுத்து மற்றும் தோல் மடிப்புகளில் கறுப்புத்தன்மையை தருகிறது. முழங்கைகள் மற்றும்  கால்களில் முட்களை போல தோலின் தன்மையை மாற்றுகின்றன. மேலும் முடி உதிர்வு பிரச்னைகள், இளநரை போன்ற பிரச்னைகளும் அதிகமாக உருவாகின்றன். இயற்கை உணவு வகைகளான கீரை, காய்கறிகள், பழங்களில் கிடைக்கும் வைட்டமின்கள் நம்முடைய தோலினைப் பத்திரமாய் பாதுகாக்கிறது. இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகள் வெளியில் விளையாடக் கூட அனுமதிப்பதில்லை.  விளையாட்டு மற்றும் தினமும் உடற்பயிற்சி தோலின் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அதுவும் காலையில்  பதினைந்து நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது நல்லது. அல்லது சூரிய நமஸ்காரம் செய்யலாம். உடலுக்குத் தேவையான வைட்டமின் டி இதன் மூலம் கிடைத்துவிடும். பலர் இதை தவிர்ப்பார்கள். காரணம் நிறம் கருப்பாகும்.


சருமப் பிரச்னைகள் வரும் என்று சொல்வார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் மேல் வைட்டமின் டி தேவையை சமன் செய்ய சூரிய ஒளி அத்யாவசியம் என்பதை மறக்கக் கூடாது. வெண்ணெய், நெய், பாலாடை, போன்றவற்றை உடல் பருமனாகிவிடும் என்று சிலர் தவிர்க்கச் சொல்வார்கள். ஆனால் அவற்றில் தான் வைட்டமின் டி அதிகம் உள்ளது. காளான் மற்றூம் அசைவ உணவில், முட்டையில் வைட்டமின் டி கிடைக்கும். ஆனால் சைவ உணவில் பால் பொருட்களில் மட்டுமே இது கிடைக்கிறது.பருவ வயதுடைய பெண்கள் மேற்கூறிய காரணங்களினால் பருமனான உடல் அமைப்பு பெறும்போது மாதவிடாய் பிரச்னைகள் சினைப்பையில் கட்டிகள் ஆகியவன தோன்றி அதன் விளைவாக முகப்பருக்கள், முகத்தில் தேவையற்ற ரோமங்கள் ஆகிய பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இவை மட்டுமல்லாமல், இரவு நீண்ட நேரம் கண்விழித்து தொலைக்காட்சி மற்றும் கணினி பார்த்தல், அதிகப்படியான மன அழுத்தம், நம் தோலின் பாதிப்பை ஏற்படுத்துகின்றன


. கண்களைச் சுற்றி கருவளையம், தலையில் பொடுகு, முகத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரத்தல், மற்றும் தோலின் அரிப்பு ஆகிய சிக்கல்களை உருவாக்குகிறது. தேவையான அளவு எண்ணெய் இல்லாவிட்டால், தோல் வறண்டு போகும். காலில் வெடிப்புகள் வரும். இவையெல்லாமல் மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாவோர். தோலில் பொலிவை இழந்து விரைவிலேயே முதுமையான தோற்றத்தைப் பெறுகிறார்கள்.கர்ப்ப காலத்தில் ஏற்படும் தோல் நோய்கள்இந்த காலத்தில், உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களால் முகத்தில் அதிகமான பருக்கள் மற்றும் மங்கு ஆகியன தோன்றும். இவை பிரசவத்தின் பின் தானாகவே மறையும் தன்மை உடையவை. இந்தக் காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் காரணத்தினால், கிறுமித் தொற்று தோலில் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிகப்படியான வியர்வை மற்றும் பூஞ்சைக் காளான் தொற்று, பிறப்புறுப்பில் அரிப்பு, மற்றும் கொப்பளங்கள் ஆகியன தோன்றலாம். கர்ப்ப காலத்தில் தளர்வான, வியர்வை உறிஞ்ச கூடிய பருத்தி ஆடைகளை அணிதல்,


தினமும் இரு நேரம் குளித்தல் போன்ற பழக்கங்கள் இத்தகைய தோல் நோயிலிருந்து பாதுகாப்பு தரும். வயிறு விரிவடைந்து பின் பழைய நிலைக்கு வரும் போது அந்த இடம் வரிவரியாகத் தோன்றும்.  அதைத் தவிர்க்க வேண்டும் என்றால், கர்ப்ப காலம் முதலே மருத்துவரின் ஆலோசனைப்படி சில ஆயின்மென்டை தடவி வரலாம். ஆனால் இவற்றை முற்றிலுமாக தவிர்க்க இயலாது. பிரசவத்தின் பின்னர் ஏற்படும் தோலின் தோய்வு மற்றும் தொப்பை வயிறு ஆகியவற்றை உடற்பயிற்சியின் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும். உடற்பயிற்சி தோலினை இறுக்கமாக்குவதுடன் பிரசவித்தபின் ஏற்படும் இடுப்பு வலி போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது.சருமத்தின் பளபளப்பை பாதுகாக்கக் சில டிப்ஸ்

 • ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி, ஆழ்ந்த உறக்கம், அமைதியான ஆனந்தமான மனநிலை, இவை அனைத்துமே தோலின் பொலிவை மேம்படுத்தும் வழிகள்.


 • முகத்தில் தேவையற்ற காஸ்மெட்டிக் கிரீம்களை பயன்படுத்துதல் தவிர்க்க வேண்டும்.
 • முகத்தில் பருக்கள் உடையவர்கள் அனைத்து அழகு சாதனம் பொருட்கள் மற்றும் அழகு சிகிச்சை நிலையங்களில் செய்யப்படும் பேசியல், ப்ளீச்சிங் போன்றவற்றை (யீணீநீவீணீறீ) (தீறீமீணீநீலீவீஸீரீ) மாதம் ஒரு முறை செய்து கொள்ளலாம்.
 • தினமும் 2&3லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
 • வெயிலில் அதிகமாக பணிபுரிவோர், சன்ஸ்க்ரீன் க்ரீம் பயன்படுத்தலாம்.
 • தோலில் வறட்சி தன்மை கொண்டவர்கள் & விஷீstuக்ஷீவீsமீக்ஷீs பயன்படுத்தலாம்.
 • முகத்தில் பப்பாளி அறைத்து பூசுதல், கருவேப்பிலையை தேங்காய் எண்ணெயில்


  கலந்து தேய்த்தல் போன்றவை நமக்கு தீமை இல்லாவிட்டாலும் இந்த பொருட்களை உணவில் தினமும் உட்கொண்டால் தோல் பொலிவு பெறும்.
 • நம் சீதோஷ்ண நிலைக்கேற்ப, ஆடைகள் உடுத்துதல் தேவையற்ற தோல் நோய்களைத் தவிர்க்கும்.
 • மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்துகளையும் தோலில் தாமாக பயன்படுத்தக் கூடாது.
 • வாழ்க்கை முறை மாற்றம் நம்முடைய தோலுக்கு மட்டுமல்ல, நம்முடைய ஆரோக்கியத்திற்கும் அவசியத் தேவை.

வாழ்க்கை முறையை மாற்றுவோம். பொலிவான தோலினைப் பெறுவோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *