JobsStudent ZoneTNPSC/UPSC/TRB/TNTET/CTET

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிகள் வெளியீடு!




தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 4 எழுத்துத் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை எப்படி தெரிந்து கொள்வது என்பது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

தமிழக அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர் தட்டச்சர் என 6 ஆயிரத்து 491 பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 4 தேர்வுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வுகள் நடத்தியது. இதனையடுத்து உத்தேச விடைகள் அறிவிக்கப்பட்டது.


வழக்கமாக டி.என்.பி.எஸ்.சி அனைத்தும் தேர்வுகள் முடிவடைந்து பல மாதங்கள் கடந்த பிறகே வெளியிடப்படும்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு நடந்து முடிந்து, 72 நாட்களில் இன்று (நவ.12) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Group 4 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் முறை:
படி 1: முதலில் விண்ணப்பதாரர்கள் என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
படி 2: முகப்பு பக்கத்தில் Result என்ற பகுதி இருக்கும். அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 3: இப்போது டி.என்.பி.எஸ்.சி நடத்திய பல தேர்வுகளின் முடிவுகள் வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கும்.
படி 4: அதில், முதலில் இருக்கும் POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-4 (GROUP-IV SERVICES), என்பதை க்ளிக் செய்ய வேண்டும்
படி 5: குரூப் 4 தேர்வு முடிவுகள் அடங்கிய பக்கம் இப்போது காட்டப்படும்.
படி 6: விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேர்வு பதிவு எண்ணை டைப் செய்து , குரூப் 4 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

நேரடியாக குரூப் 4 தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கு என்ற லிங்கை க்ளிக் செய்யவும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *