GamesNEWS

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்று அரசு பள்ளி மாணவன் சாதனை:







மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்று அரசு பள்ளி மாணவன் சாதனை:* 

 
இந்திய கிரிக்கெட் வீரர் எம். எஸ்.தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு “சிபி ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன்” சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி மதுரை காந்தி மியூசியத்தில் 7-7-2019 ஞாயிறு அன்று காலை நடைபெற்றது.  இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர் எம்.சந்தோஷ் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் 5 புள்ளிகளை பெற்று, முதல் இடத்தை பிடித்தார்.  பரிசளிப்பு விழாவில் மாணவர் எம். சந்தோஷூக்கு  பெரிய கோப்பையும், சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


  ஆறுதல் பரிசுகள் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் எஸ்.தேவ்நாத் மற்றும் பி.பிரபாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.  போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.கிறிஸ்டோபர் ஜெயசீலன், உதவி தலைமை ஆசிரியர் திரு.வாசி மாமலை, பிடிஏ தலைவர் திரு. மகேந்திரன் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியை திருமதி.மணிமேகலை, இடைநிலை ஆசிரியரும் பயிற்சியாளருமான திரு.ஞா.செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *